×

லெஸ்பியன் தோழியுடன் சேர்ந்து மகனை கொன்ற தாய்:மேற்குவங்கத்தில் அதிர்ச்சி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ‘லெஸ்பியன்’ உறவில் ஈடுபட்ட தாய், தனது தோழியுடன் சேர்ந்து மகனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலம் ஹூக்லியை சேர்ந்த சாந்தா ஷர்மா என்ற பெண்ணும், இஷ்ரத் பர்வீன் என்ற பெண்ணும் தோழிகளாக இருந்து வந்தனர். சாந்தா ஷர்மாவுக்கு திருமணமான நிலையிலும் கூட, இருவரும் நட்பாக பழகி வந்தனர். ஆனால் இவர்களுக்குள் ‘லெஸ்பியன்’ உறவு இருப்பது யாருக்கும் தெரியாது.

கடந்த சில நாட்களுக்கு முன் இஷ்ரத் பர்வீன், தனது தோழி சாந்தா ஷர்மாவின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் சாந்தா ஷர்மாவின் 10 வயது மகன் இருந்தார். இந்த நிலையில் தோழிகள் இருவரும் ‘லெஸ்பியன்’ உறவில் ஈடுபட்டிருந்தனர். இதைப் பார்த்த சிறுவன், அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினான். அதனால் அதிர்ச்சியடைந்த ேதாழிகள் இருவரும், அந்த சிறுவனை பிடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். எங்கே தங்களது ரகசிய ‘லெஸ்பியன்’ உறவு அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தில், இருவரும் சேர்ந்து அந்த சிறுவனை அடித்துக் கொன்றனர்.

பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பினர். சிறுவன் கொலையான விஷயம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலில் காயங்களுடன் கிடந்த சிறுவனின் சடலத்தை கைப்பற்றினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள், மொபைல் டவர் இருப்பிடங்கள், தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ‘லெஸ்பியன்’ தோழிகளான இஷ்ரத் பர்வீன், சிறுவனின் தாயான சாந்தா ஷர்மா ஆ்கிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post லெஸ்பியன் தோழியுடன் சேர்ந்து மகனை கொன்ற தாய்:மேற்குவங்கத்தில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : KOLKATA ,Shanta Sharma ,Ishrat Parveen ,Hoogli ,
× RELATED கொல்கத்தா லக்னோ மோதல்: 4வது வெற்றி யாருக்கு?