×

புரோ கபடி தொடர்; லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

பஞ்சகுலா: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் அரியானா மாநிலம் பஞ்சகுலாவில் நேற்று நடந்த போட்டியில் யு மும்பா-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டி 45-45 என சமனில் முடிந்தது. இந்நிலையில் இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது.

இன்று இரவு 8 மணிக்கு புனேரி பால்டன்-உ.பி.யோத்தா மோதுகின்றன. புள்ளி பட்டியலில் தற்போது ஜெய்ப்பூர் மற்றும் புனேரி தலா 16 வெற்றிகளுடன் முறையே முதல் 2 இடத்தில் உள்ளன. இன்று புனேரி வென்றால் ஜெய்ப்பூரை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறும். தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-பெங்களூரு புல்ஸ் மோதுகின்றன. இதில் பெங்களூரு பிளே ஆப் வாய்ப்பு இழந்து விட்ட நிலையில், ஆறுதல் வெற்றிக்காகவும், மறுபுறம் அரியானா வெற்றியுடன் பிளே ஆப்பிற்கு செல்லும் முனைப்பிலும் களம் இறங்கும்.

தொடர்ந்து 2 எலிமினேட்டர் போட்டிகள் வரும் 26ம் தேதி அரையிறுதிபோட்டிகள் 28 மற்றும் இறுதி போட்டி மார்ச் 1ம்தேதி நடைபெற உள்ளது.இந்த போட்டிகள் அனைத்தும் ஐதராபாத்தில் நடக்கிறது.

The post புரோ கபடி தொடர்; லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Pro Kabaddi Series; ,Panchkula ,10th ,Pro Kabaddi League series ,Mumba ,Telugu Titans ,Panchkula, Ariana ,Pro Kabaddi Series ,Dinakaran ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு