×

கீழ்வேளூர் அருகே வயலில் பதுக்கிய 620 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

கீழ்வேளூர் : கீழ்வேளூர் அருகே வயலில் பதுக்கிய 620 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு சாராய கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க எஸ்பி ஹர்ஷ்சிங் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கீழ்வேளூர் பகுதியில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக எஸ்பி ஹர்ஷ்சிங்குக்கு தகவல் வந்தது. அதன்படி கீழ்வேளூர் அடுத்த கீழக்காவாலாக்குடி பகுதியில் தனிப்படை எஸ்ஐ அக்பர் அலி தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் நேற்று முன்தினம் மாலை ஈடுபட்டனர்.

அப்போது கீழக்காவாலாக்குடி காலனி தெருவை சேர்ந்த தவமணி(50) என்பவருக்கு சொந்தமான வயலில் சம்பா சாகுபடி நெற்பயிர்களுக்கு இடையே 13 சாக்கு மூட்டையில் 620 லிட்டர் சாராயம் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வயலில் பதுக்கிய 620 லிட்டர் சாராய மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தவமணியை தேடி வருகின்றனர்.

The post கீழ்வேளூர் அருகே வயலில் பதுக்கிய 620 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Killyvellur ,Kilivelur ,SP ,Harsh Singh ,Karaikal ,Nagapattinam ,Kilivalelur ,Kilylvellur ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்