×

அழகு நிலையத்தில் விபசாரம்: 5 பேர் கைது

கோவை: கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கே வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பத்ரகாளி தலைமையிலான போலீசார் அங்கே சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கே இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விபசார புரோக்கர்களான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அழகு நிலைய வரவேற்பாளர் சுஜீஸ் (39), பெண் புரோக்கர்கள் கேரளா கோட்டயத்தை சேர்ந்த ஸ்டெபி மோல் (34), மைசூரை சேர்ந்த நாகம்மா (36), அக்‌ஷதா (33), பெங்களூரை சேர்ந்த ராணி (29) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் அழகு நிலைய சேவை என பெயருக்கு காட்டி கொண்டு முழு அளவில் விபசார தொழில் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் ஓட்டலில் அறை எடுத்து இந்த தொழில் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. அடிக்கடி வெளி மாநிலத்தில் இருந்து இளம்பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அழகு நிலையத்தில் விபசாரம்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Gandhipuram Crosscut Road ,Kattur police ,Inspector ,Bhadrakali ,
× RELATED தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்க்கும் கோவை...