×

சில்லி பாயின்ட்…

* 2022ல் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து ஓய்வெடுத்து வந்த ரிஷப் பன்ட், தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதுடன் ஐபிஎல் 2024 தொடரில் களமிறங்க முழுவீச்சில் தயாராகி வருகிறார். அதற்கு முன்னோட்டமாக ஆலூரில் நடந்த ஒரு பயிற்சி ஆட்டத்தில் பன்ட் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

* கிரிக்கெட் நட்சத்திரம் விராத் கோஹ்லி – நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதியருக்கு பிப். 15ம் தேதி 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ‘வாமிகாவின் தம்பியை இந்த உலகுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. இந்த அழகான தருணத்தில் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் வேண்டுகிறோம்’ என இருவரும் தங்கள் X பக்கத்தில் தகவல் பதிந்துள்ளனர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Rishabh Pant ,IPL 2024 series ,Alur ,Dinakaran ,
× RELATED கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில்...