×

மனைவி இறந்ததால் மகனுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி காடு பசுவன்மாளம் கிராமத்தை சேர்ந்தவர் சென்னியப்பன் (68). இவரது மகன் ராம்குமார் (24). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னியப்பனின் மனைவி சரளம்மாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் சென்னியப்பன் மற்றும் அவரது மகன் ராம்குமார் இருவரும் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் நேற்று அதிகாலை வீட்டில் உள்ள ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிகாம் படித்த ராம்குமார் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மனைவி இறந்ததால் மனமுடைந்த சென்னியப்பன் தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது.

The post மனைவி இறந்ததால் மகனுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Chenniyappan ,Pasuvanmalam ,Kadampur ,Sathyamangalam, Erode district ,Ramkumar ,Senniappan ,Saralammal ,Chenniappan ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...