×

ஆண்டாள் கோயிலில் சிலை, கொடிமரம் மாயம் டிஎஸ்பி நேரில் விசாரணை

மதுரை: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி முத்துராஜா கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், கோயில் பழைய கொடி மரங்கள் மற்றும் கற்களாலான யானை சிலைகள் மாயமாகியுள்ளது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த ஆண்டாள் கோயிலுக்கு மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில் 10 போலீசார் நேற்று மதியம் வருகை தந்தனர். கோயிலில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மதியம் 2 மணிக்கு துவங்கிய விசாரணை மாலை 7 மணி வரை நடைபெற்றது. 5 மணி நேரம் நடைபெற்ற விசாரணையால் கோயில் பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post ஆண்டாள் கோயிலில் சிலை, கொடிமரம் மாயம் டிஎஸ்பி நேரில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Idol ,Andal temple ,DSP ,Madurai ,Thiruvilliputhur ,Administrative Officer ,Muthuraja ,Madurai Idol Anti-Smuggling Unit ,
× RELATED அதிமுக, பாஜவினரிடம் ₹1.76 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி