×

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அரசு பஸ்சில் பயணித்த கலெக்டர் சைக்கிளில் வந்த கூடுதல் கலெக்டர்

மயிலாடுதுறை: வாகனங்கள் பெருக்கத்தால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் என அனைவரும் மாதத்தில் ஒரு நாள் வாகனத்தில் செல்லாமல், அரசு பேருந்திலும், நடைபயணமாகவும், சைக்கிளிலும் அலுவலகம் செல்ல தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வலியுறுத்தியும் மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து அரசு பஸ்சில் கலெக்டர் அலுவலகம் வந்தார். கலெக்டருடன் டிஆர்ஓ மணிமேகலை, மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் தமிழ்ஒளி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் வந்தனர். இதே போல் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஷபீர்ஆலம், தனது முகாம் அலுவலகத்தில் இருந்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்துக்கு சைக்கிளில் சென்று பங்கேற்றார்.

The post சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அரசு பஸ்சில் பயணித்த கலெக்டர் சைக்கிளில் வந்த கூடுதல் கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...