×

தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா? 6 நாட்களில் 6 எய்ம்ஸ் திறப்பு மதுரைக்கான எய்ம்ஸ் எங்கே: மோடிக்கு மதுரை எம்பி கேள்வி

மதுரை: ஜம்மு – காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் கடந்த 2019, பிப்ரவரியில் பிரதமர் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை நேற்று திறந்துள்ளார். தொடர்ந்து, வரும் 25ம் தேதி குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடக்கும் விழாவில் ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப்பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய 5 எய்மஸ் மருத்துவமனைகளை திறக்க உள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் 2015ல் அறிவிக்கப்பட்டு, 2019ல் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஒத்த செங்கலாகவே உள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன், ‘‘அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர். ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன… மதுரையைத் தவிர. தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா? எங்கள் எய்ம்ஸ் எங்கே?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

The post தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா? 6 நாட்களில் 6 எய்ம்ஸ் திறப்பு மதுரைக்கான எய்ம்ஸ் எங்கே: மோடிக்கு மதுரை எம்பி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tappai ,AIIMS ,Madurai ,Modi ,AIIMS Hospital ,Samba district ,Jammu and Kashmir ,Rajkot, Gujarat ,Rajkot, ,Mangalagiri ,Andhra Pradesh ,Bathinda ,Punjab ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...