×

ஹாலிவுட்டில் கொடிகட்டி பறந்த பிரபல ஆபாச நடிகை தற்கொலை

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் கொடிகட்டி பறந்த பிரபல ஆபாச நடிகை காக்னி லின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த பிரபல பாடகர், நடனக் கலைஞரான ஆபாச திரைப்பட நடிகை காக்னி லின் கார்ட்டர் (36), அவரது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவலை அவரது நண்பர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர், பிரபல செய்தி நிறுவனங்கள் நடிகை காக்னி லின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்தன. தற்போது அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து, காக்னி லின் கார்ட்டரின் நினைவாக நினைவுச் சின்னம் ஏற்படுத்த நிதி வசூல் செய்து வருகின்றனர்.

கடந்த 2000ம் ஆண்டு வாக்கில் வெளியான ஆபாச திரைப்படங்களில் நடித்த காக்னி லின் கார்ட்டர், ஏவிஎன் விருதுகளை பெற்றார். சொந்த ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காக்னி லின் கார்ட்டரின் தற்கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஹாலிவுட்டில் கொடிகட்டி பறந்த பிரபல ஆபாச நடிகை தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Hollywood ,Los Angeles ,Cagney Lynn Carter ,Los Angeles, America ,
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்