×

விளிம்பு நிலை மக்களின் பக்கமே காங்கிரஸ் கட்சி; செல்வப்பெருந்தகையின் வழிகாட்டுதலில் தேர்தலில் சிறப்பான வெற்றி பெறுவோம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், அஸ்வத்தாமன் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக விளிம்பு நிலை மக்களின் பக்கமே காங்கிரஸ் கட்சி நின்றுள்ளது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் தலைவர் செல்வப்பெருந்தகையை, தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளதாகும்.

புரட்சியாளர் அம்பேத்கரை இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்ட நிர்ணய குழுவின் தலைவராக அறிவித்ததானாலும் சரி, அவரை இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சராக ஆக்கியதானாலும் சரி, பெருந்தலைவர் காமராஜரின் அமைச்சரவையில் இந்து அறநிலைத்துறைக்கு ஒரு தாழ்த்தப்பட்ட நபரான பரமேஸ்வரனை இந்தியாவின் முதல் தாழ்த்தப்பட்ட அமைச்சராக்கியதனாலும் சரி, பாபு ஜெகஜீவன் ராமை காங்கிரசின் தலைவராக ஆக்கியதனாலும் சரி. கக்கனை அமைச்சர் ஆக்கியதாலும் சரி, இப்படி விளிம்பு நிலை மக்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிப்பதில் நேரு காலம் தொடங்கி இன்றைய தினம் ராகுல் காந்தி காலம் வரை அதனைத் தொடர்ந்து செயல்படுத்தி உரிய அங்கீகாரம் வழங்குவதை தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ள ஒரே இயக்கம் இந்தியாவில் காங்கிரஸ்தான்.

தற்பொழுது இந்த நாட்டின் ஜனநாயகத்தை காக்க வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாஜ அரசை தோல்வியுறச் செய்யவும், இந்த நாட்டின் இறையாண்மையையும் மதச்சார்பின்மையையும் மீட்டெடுக்க ஒரே வல்லமை பொருந்திய இயக்க காங்கிரஸ் கட்சி மட்டுமே. இந்த இக்கட்டான சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள எங்கள் அரசியல் ஆளுமை, எங்களின் அடையாளம் செல்வப் பெருந்தகையை நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைக்கு நாங்கள் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது அயராத உழைப்பும் அர்ப்பணிப்பான தலைமையையும் கொண்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி போட்டியிடும் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி செல்வப் பெருந்தகையின் சிறப்பான வழிகாட்டுதலில் வெற்றி அடைவோம் என்று இந்த நன்னாளில் உறுதியாக கூறிக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

The post விளிம்பு நிலை மக்களின் பக்கமே காங்கிரஸ் கட்சி; செல்வப்பெருந்தகையின் வழிகாட்டுதலில் தேர்தலில் சிறப்பான வெற்றி பெறுவோம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், அஸ்வத்தாமன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress party ,Selvaperundagai ,Youth Congress ,president ,Lenin Prasad ,Aswathaman ,Chennai ,Tamil Nadu ,Principal General Secretary ,Selvaperunthagai ,Dinakaran ,
× RELATED மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்;...