×

அதிமுகவுடன் கூட்டணியா?… எடப்பாடியுடன் உரையாடிய ஜி.கே.மணி

சென்னை; சட்டமன்ற வளாகத்தில் எடப்பாடி பழனிசாமியை பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி சந்தித்து உரையாடினார். வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கலுக்கு பின் பேரவையில் இருந்து வெளியே வந்தபோது இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், ஜி.கே.மணியும் சிறிது நேரம் உரையாடினர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாமக இதுவரை யாருடன் கூட்டணி என அறிவிக்கவில்லை. ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் சந்தித்துப் பேசியிருந்தார்.

The post அதிமுகவுடன் கூட்டணியா?… எடப்பாடியுடன் உரையாடிய ஜி.கே.மணி appeared first on Dinakaran.

Tags : Alliance ,AIADMK ,GK Mani ,Edappadi ,Chennai ,Pamaka ,President ,Edappadi Palaniswami ,Former ,Minister ,Sengottaiyan ,Dinakaran ,
× RELATED நான் செல்லும் இடங்களில் எல்லாம்...