×

மாயமான மாணவி உறவினர் வீட்டில் மீட்பு

கெங்கவல்லி: கெங்கவல்லி ஒன்றியம், பச்சமலை ஊராட்சி வேப்படிபாலக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயியின் 17 வயது மகள் பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பாததால் பெற்றோர் கெங்கவல்லி எஸ்ஐ நிர்மலாவிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பிளஸ்2 மாணவியை சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து மீட்டனர். விசாரணையில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரியவந்ததால், பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து மாணவியை பெற்றோரிடம் போலீசார் அனுப்பி வைத்தனர்.

 

The post மாயமான மாணவி உறவினர் வீட்டில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Vepipalakkad ,Pachamalai Panchayat ,Union ,Phoolampady Government Higher Secondary School ,
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்