×

டூவீலர் திருடியவர் கைது

சங்ககிரி: இடைப்பாடி தாலுகா கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(19). இவர் சங்ககிரி கொங்கணாபுரம் பிரிவு சாலையில் உள்ள பழைய டயர் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 7ம் தேதி மதியம், தனது டூவீலரை கடைக்கு வெளியில் நிறுத்தி விட்டு, சாப்பிட கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. நேற்று சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். அதன் பேரில், எஸ்ஐ உதயகுமார் வழக்கு பதிந்து சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அவரை பிடித்து விசாரித்ததில் வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். அதன் பேரில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த ரமேஷ்குமார் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

The post டூவீலர் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,Sakthivel ,Konganapuram ,Eadpadi taluk ,Konkanapuram Division Road, Sangakiri ,Dinakaran ,
× RELATED போலீசார் கொடி அணிவகுப்பு