×

அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்

மேட்டூர்: மேச்சேரி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் தெருமுனை பிரசார கூட்டம், காமனேரியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திரசேகரன் எம்பி தலைமை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் பழக்கடை மூர்த்தி பேசினார். மேச்சேரி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சந்திரசேகரன் எம்பி கலந்து கொண்டு பேசினார். இதில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எமரால்டு வெங்கடாஜலம், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கலையரசன், மேச்சேரி பேரூர் செயலாளர் குமார், ஜெயலலிதா பேரவை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, நிர்மல்ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post அதிமுக தெருமுனை பிரசார கூட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Mettur ,Mechery East Union AIADMK ,Kamaneri ,City AIADMK ,Chandrasekaran ,Bekadai Murthy ,Mechery… ,AIADMK street ,Dinakaran ,
× RELATED மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்