×

வேங்கைவயல் வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடியின் திருச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்

சென்னை : வேங்கைவயல் வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடியின் திருச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி, மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தஞ்சை துணைக் காவல் கண்காணிப்பாளர் கல்பனா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிச. 26ம் தேதி தெரியவந்தது. இச்சம்பவத்தில் தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அதிகாரியாக திருச்சியைச் சேர்ந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி இருந்தார்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல் இன்று வரை 394 வது நாளாக சிபிசிஐடி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சிபிசிஐடி. போலீசார் மேற்கொண்டனர். 2 பேரிடமும் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அடுத்தகட்டமாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது. அதே சமயம் சிபிசிஐடி. விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் சிபிசிஐடி. அதிகாரிகள் மூலம் இந்த விவகாரத்தில் 221 நபர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் வேங்கைவயல் வழக்கை விசாரித்த சிபிசிஐடி. அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். அதன்படி பால்பாண்டி மாற்றப்பட்டு டி.எஸ்.பி. கல்பனா புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post வேங்கைவயல் வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடியின் திருச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Trichy Deputy Superintendent of Police ,Venkaivyal ,CHENNAI ,Balpandi ,Thanjavur ,Deputy Superintendent of Police ,Kalpana ,Vengaiwayal Pattialinam, Puthukkottai district ,
× RELATED வாழ்நாள் ஆயுள் சிறை விதிக்கப்பட்ட...