×

திமுக கூட்டணியில் குறைந்தது 3 தொகுதிகளை கேட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி..!!

சென்னை: திமுக கூட்டணியில் குறைந்தது 3 தொகுதிகளை கேட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையினை திமுக முன்னெடுத்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சு வார்த்தை என்பது ஒவ்வொரு கட்சிகளுடனும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் குறைந்தது 3 தொகுதிகளை கேட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார், அதில் அவர் கூறியதாவது,

திமுக கூட்டணியில் 3தொகுதிகளை கேட்கும் மார்க்சிஸ்ட்

திமுக கூட்டணியில் குறைந்தது 3 தொகுதிகளை கேட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுகவுடன் முதற்கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே வெற்றி பெற்ற மதுரை, கோவையுடன் மேலும் ஒரு தொகுதியை கூடுதலாக ஒதுக்க வலியுறுத்தி உள்ளோம்.

10 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ள மார்க்சிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள 10 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். மதுரை, கோவை, நாகை, புதுக்கோட்டை, குமரி, வடசென்னை தொகுதிகளில் கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே போட்டியிட்ட 2 தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்டுள்ளோம். எங்கள் கூட்டணியில் பெரிதாக தொகுதிப் பங்கீடு பிரச்சனை எதுவும் இருக்காது.

கோவை, மதுரை எம்.பி.க்கு மீண்டும் வாய்ப்பா?

கோவை பி.ஆர்.நடராஜன், மதுரை சு.வெங்கடேசனுக்கு மீண்டும் வாய்ப்பு தருவது குறித்து மாநிலக்குழு முடிவெடுக்கும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிடக் கூடாது என கட்சியில் விதி உள்ளது. கட்சி முடிவுகளின் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடைபெறும் என்றும் கே.பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

The post திமுக கூட்டணியில் குறைந்தது 3 தொகுதிகளை கேட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Marxist ,K. Balakrishnan ,DMK ,Chennai ,Dinakaran ,
× RELATED எங்கள் கொள்கையோடு உடன்பட்ட கமல்ஹாசன்,...