![]()
சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த 91 பேரை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா, 4 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்து வரும் நபர்களை போலீசார் கைது ெசய்து வருகின்றனர். அதன்படி சென்னை மாநகரில் கடந்த 27ம் தேதி முதல் 10ம் ேததி வரையிலான காலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விறப்னை செய்ததாக 46 வழக்குகள் பதிவு செய்து, ரவுடிகள் உட்பட 91 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா, 4 கிராம் மெத்தம்பெட்டமைன், 3,623 போதை மத்திரைகள், ரூ.31,200, 10 பைக், ஒரு ஆட்டோ, ஒரு இலகுரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், செ்னனையில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்ந்து விற்பனை ெசய்து வந்த 78 பேர், போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்ேதார் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
* புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்
புழல்: புழல் சிறையில் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் மத்திய சிறையில் தண்டனை பிரிவு, விசாரணை மற்றும் பெண்கள் பிரிவு என 3 சிறைச்சாலைகள் உள்ளன. இங்கு சுமார் 150 பெண்கள் உள்ளிட்ட 3,500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களை தினமும் உறவினர்கள், நண்பர்கள் என பலர் வந்து பார்த்துச் செல்கின்றனர். சிறை வளாகத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவ்வப்போது சோதனை நடத்தி, கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் விசாரணை சிறையில் நேர்காணல் அறை அருகே, நேற்று முன்தினம் ஒரு பாலித்தீன் கவரால் சுற்றப்பட்ட பொட்டலம் இருந்தது. சிறை காவலர்கள் அதை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் 50 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. கஞ்சா பொட்டலத்தை சிறை கைதிக்கு கொடுக்க வந்த நபர்கள், அதனை கொடுக்க முடியாமல் அங்கேயே போட்டுவிட்டுச் சென்று விட்டார்களா, அதை வீசி சென்ற நபர் யார் என சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து சென்னையில் கஞ்சா விற்ற 91 பேர் கைது: 40 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.
