×

தமிழக காவல்துறையில் பாலியல் குற்றங்களை தடுக்க தனிப்பிரிவு: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 11.12 சதவீத அளவுக்கும், பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கை 8.31 சதவீத அளவுக்கும் அதிகரித்துள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக காவல்துறையில் தனிப் பிரிவு தொடங்கப்பட வேண்டும். மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் தடுப்பதற்கான சிறப்புத் திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழக காவல்துறையில் பாலியல் குற்றங்களை தடுக்க தனிப்பிரிவு: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu Police ,Anbumani ,CHENNAI ,PAMC ,president ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்