×

சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்து சாலை அமைப்பு 24% வட்டியுடன் ரூ.12.28 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்: ஊராட்சி மன்ற தலைவருக்கு கலெக்டர் உத்தரவு

பள்ளிப்பட்டு: சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்து சாலை அமைத்த ஊராட்சி மன்ற பெண் தலைவருக்கு ரூ.12.28 லட்சம் அபராத தொகையுடன் 24 சதவீதம் வட்டி சேர்த்து செலுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஜான்சி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்லம்பாக்கம் மலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்து சாலை அமைத்ததாக கூறிய புகாரின் பேரில், அப்போதைய வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்து, கிராவல் மண் அனுமதியின்றி எடுத்ததை உறுதிப்படுத்தி, ஊராட்சி மன்ற தலைவர் ரூ.12.28 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டார்.

பள்ளிப்பட்டு வட்டாட்சியர் மூலம் அபராத தொகை அரசுக்கு செலுத்த இரண்டு முறை நோட்டீஸ் வழங்கப்பட்டும், அபராத தொகையை செலுத்தவில்லை. இந்நிலையில் கிராவல் மண் முறைகேடாக பயன்படுத்திய ஊராட்சி மன்றத் தலைவர் ஜான்சி, கோட்டாட்சியர் விதித்த அபராத தொகையுடன் 24 சதவீதம் வட்டி அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

 

The post சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்து சாலை அமைப்பு 24% வட்டியுடன் ரூ.12.28 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்: ஊராட்சி மன்ற தலைவருக்கு கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : panchayat ,Pallipattu ,president ,
× RELATED கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஹரி நாடார் கைது