×

எனக்காக பிரார்த்தனை செய்து , வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: “நான் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, எனக்காக பிரார்த்தனை செய்து , வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், நவம்பர் 18ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சளி காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காகதான் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலில் தகவல் வெளியானது.

பின்னர், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தது. அதுமட்டுமின்றி மேலும் 14 நாட்களுக்கு விஜயகாந்துக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது.

இதனிடையே விஜயகாந்த் பூரண குணமடைய தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து விடு திரும்பியதாக இன்று காலை மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் “பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய திரை உலகை சேர்ந்த அனைவருக்கும். அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், தேமுதிக மாவட்ட கழக செயலாளர்களுக்கும், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் அனைவருக்கும், எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

The post எனக்காக பிரார்த்தனை செய்து , வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் appeared first on Dinakaran.

Tags : Demutika ,President ,Vijayakanth ,Chennai ,Miat Hospital ,Vijayakant ,Dinakaran ,
× RELATED அதிமுக – தேமுதிக கூட்டணி...