![]()
சென்னை: தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும் தேர்வு மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசிடம் தேர்தல் ஆணையம் கோரியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. பொதுவாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை தீர்மானிப்பதற்கு முன்பாக, தேர்தல் ஆணையம் தரப்பில், அந்தந்த மாநில அரசிடம், குறிப்பிட்ட மாதங்களில், பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் ஏதேனும் பருவத் தேர்வுகள் நடைபெறுகின்றதா? அங்கு குறிப்பிட்ட எவ்வாறு வானிலை அந்த மாநிலத்தில் இருக்கும்? அதுமட்டுமல்லாமல், பெரிய திருவிழாக்கள் ஏதேனும் அந்த மாதத்தில் நடைபெறுகின்றதா? என்ற விவரத்தை எல்லாம் தேர்தல் ஆணையம் கேட்டுப்பெறும்.
அவ்வாறு, கேட்டுப் பெற்ற பிறகு தான், அனைவருக்கும் விடுமுறை இருக்கக்கூடிய நாளில், பெரிய அளவில், திருவிழாக்கள் இல்லாத சூழ்நிலையில் குறிப்பாக, பள்ளிக்கூட கட்டிடங்கள் எல்லாம், வாக்குப்பதிவு மையங்களாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதன் சூழ்நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கக்கூடிய, வாய்ப்பு இருக்கின்றதா? என்பதை எல்லாம், கண்டறிந்த பிறகு தான் தேர்தல் தேதி, வாக்குப்பதிவு தேதியை அறிவிப்பார்கள். அந்த அடிப்படையில் தற்போது தமிழகத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வரக்கூடிய திருவிழாக்கள் ஏதேனும் இருக்கின்றனவா? உள்ளிட்ட விவரங்களை எல்லாம், தேர்தல் ஆணையம் தரப்பில், கேட்டுப் பெற்று இருக்கின்றார்கள்.
அதுமட்டுமல்லாமல் பள்ளிகளில், பருவத்தேர்வு நடைபெறக்கூடிய அந்த அட்டவணைகளையும் கேட்டு பெற்று இருக்கின்றனர். மேலும், தற்போது புயல் காரணமாக பெரும் மழை, வெள்ள பாதிப்பு சென்னையில் ஏற்பட்ட நிலையில், அது தொடர்பான பாதிப்புகளையும் கேட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடாக இந்த விவரங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். புயல் வெள்ளத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கண்ட்ரோல் யூனிட்டுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
புதிய வாக்காளர்களுக்கு மார்ச் மாதம் இலவச வாக்காளர் அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
The post தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும் தேர்வு, திருவிழாக்களின் விவரங்களை தமிழக அரசிடம் கோரியது தேர்தல் ஆணையம்: சத்யபிரதா சாகு பேட்டி appeared first on Dinakaran.
