×

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் காவல்நிலைய ரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டது. 42 பெட்டிகளுடன் சென்ற சரக்கு ரயிலில் சுமார் 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி விபத்துகுள்ளானது. ரயில் பெட்டிகள் பாரம் தாங்காமல் தண்டவாளம் உடைந்து 10 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.

இதையடுத்து சரக்கு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சீர் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரயில் பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் பெட்டிகள் தடம் புரண்டதன் காரணமாக சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே மின்சார ரயிகள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் செல்லும் விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து வந்த ரயில்வே அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

The post செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Tags : Chengalpattu railway ,Chengalpattu ,Tuticorin ,Chennai ,Chengalpattu train station ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...