- மக்கள் நீதிமன்றம்
- ஷிர்கஜி
- தேசிய மக்கள்
- நீதிமன்ற முகாம்
- ஷிர்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற
- மயிலாடுதுறை மாவட்டம்
- சீர்குலைந்த
- தின மலர்
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது. முகாமில் சார்பு நீதிபதி மும்தாஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சோழவேந்தன், நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி, நீதிபதி கனிமொழி ஆகியோர் தலைமையில் காசோலை வழக்கு குற்ற வழக்கு, குடும்ப தகராறு வழக்கு, சொத்து பிரச்சனை வழக்கு தொடர்பான 315 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.2,48,500 வசூல் செய்யப்பட்டது. முகாமில் வழக்கறிஞர்கள் நெடுஞ்செழியன், தியாகராஜன், மணிவண்ணன், கவிதா, பாலசுப்ரமணியன், சிங்காரவேலன், முத்துக்குமார், ராம்குமார், குமரேசன், சத்தியமூர்த்தி மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post சீர்காழியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 315 வழக்குகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.