×

வேளாங்கண்ணியில் 650 லிட்டர் புதுச்சேரி சாராயம் பறிமுதல்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி ஹார்ஷ்சிங் தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் நேற்று வேளாங்கண்ணி அருகே கலசம்பாடி பாலம் பகுதியில் சோதனை செய்தனர். இதில் அப்பகுதியில் புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் ஈடுபட்ட புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (26) கைது செய்து அவரிடமிருந்து 650 லிட்டர் புதுச்சேரி மாநிலம் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வேளங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post வேளாங்கண்ணியில் 650 லிட்டர் புதுச்சேரி சாராயம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Velankanni ,Nagapattinam ,SP Harsh Singh ,Dinakaran ,
× RELATED பாஜ கொடியுடன் காரில் வந்து சொகுசு காரை திருடிய கும்பல்