பொன்னேரி, டிச. 11: மீஞ்சூர் அருகே முரிச்சம்பேடு கிராமத்தில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு, நிவாரண உதவிகளை துரை சந்திரசேகர் எம்எல்ஏ வழங்கினார்.
மீஞ்சூர் அருகே மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தினமும் மக்களை சந்தித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை மீஞ்சூர் அடுத்த முரிச்சம்பேடு கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு நேரில் சென்றார். பின்னர், அவர்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொன்னேரி தாசில்தார் மதிவாணன், வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம், அத்திப்பட்டு காங்கிரஸ் வட்டார தலைவர் புருஷோத்தமன், நிர்வாகிகள் உதயகுமார், ராஜ் தீபக், உதயராஜ் நவீன், பிரபு, ஜீவா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
The post முரிச்சம்பேடு கிராமத்தில் நிவாரண உதவி appeared first on Dinakaran.
