×

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

கரூர் : அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக சீரிளமைத் திறன் கொண்ட அன்னை தமிழுக்கு தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடம் இருந்து 2023- 24ம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. முதுமைக் காலத்திலும் வறுமை, தமிழ் தொண்டர் மக்களை தாக்கா வண்ணம் மாதந்தோறும் 3500, மருத்துவப்படி ரூ.500 என உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெற்ற தமிழறிஞர்களின் மறைவுக்கு பின்னர் அவரின் மரபுரிமையாருக்கு அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500 மற்றும் மருத்துவபடியாக ரூ.500 என வழங்கப்படுகிறது.

The post அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,
× RELATED வாங்கல் அருகே உயர் ரத்த அழுத்த பாதிப்பால் மயங்கி விழுந்த பெண் பரிதாப பலி