×

கரூரில் காவிரி, அமராவதி ஆறு ஓடுகிறது கலெக்டர் அனுப்பிவைப்பு

கரூர், : கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி 15 ஆயிரம் ஹெக்டே பரப்பளவில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறு என இரண்டு ஆறுகள் ஓடுகிறது. இதில், கரூர் வழியாக வரும் அமராவதி ஆறு திருமுக்கூடலூர் வழியாக மாயனூர் நோக்கிச் செல்லும் காவிரி ஆற்றில் அமராவதி ஆறு கலந்து ஒரு மித்த காவிரி ஆறாக மாயனூர் நோக்கிச் செல்கிறது. கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடிகள் வழக்கமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நெல் ரகங்கள் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்று வந்தாலும் காவிரி ஆறு பயணிக்கும் பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி அதிகளவு நடைபெற்று வருகிறது. நெல் சாகுபடிக்கான பணிகளை அனைத்து விவசாயிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

The post கரூரில் காவிரி, அமராவதி ஆறு ஓடுகிறது கலெக்டர் அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,Cauvery ,Amaravati ,Dinakaran ,
× RELATED தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப...