×

தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்து அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீசிய நிலையில், இங்கிலாந்து 40 ஓவரில் (மழை காரணமாக) 9 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்தது (டக்கெட் 71, லிவிங்ஸ்டன் 45). மீண்டும் மழை குறுக்கிட்டதால் 34 ஓவரில் 188 ரன் என மாற்றி அமைக்கப்பட்ட இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 31.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து வென்றது (அதனேஸ் 45, கீசி கார்ட்டி 50, ரொமாரியோ 41*).

The post தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் appeared first on Dinakaran.

Tags : West Indies ,Bridgetown ,England ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி: ரஸ்ஸல் அதிரடி ஆட்டம்