×

மிக்ஜாம் புயல் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 6வது நாளாக நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக, வரலாறு காணாத அளவில், தொடர்ந்து பெய்த கனமழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்தது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பாதிப்புள்ளான வேளச்சேரி பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தொடர்ந்து 6வது நாளாக இன்றும் (10.12.2023) வழங்கினார்.

சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி வளாகத்தில் இருந்து லாரிகளில் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டுச் சென்று, அப்பகுதி மாமன்ற உறுப்பினர்கள் மூலமாக, வேளச்சேரி பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் தெரு, ஜெகநாதபுரம் தெரு, ஊரனியம்மன் கோவில் தெரு, தண்டபாணி தெரு, உத்தேரி கரை ராஜத்தெரு, நடராஜன் தெரு, கபாலி தெரு, நியூ காலனி, பரமேஸ்வரன் தெரு, கோகிலன் தெரு, டான்சி நகர், வி.ஜி.பி.நகர், அன்னை இந்திரா நகர், வீனஸ் காலனி, மகாலெட்சுமி தெரு, தந்தை பெரியார் நகர் (phase-1 &2), அன்பழகன் நகர், எம்.ஜி.ஆர். நகர் (கானகம்), கட்டபொம்மன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பரணி தெரு, சரஸ்வதி தெரு, யமுனா தெரு, பொன்னி தெரு, புத்தர் தெரு, ஸ்ரீனிவாச மின் ஹால் அருகில், கலைஞர் நகர் (178ஏ) ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அரிசி, கோதுமை, பிரட், பிஸ்கெட் மற்றும் போர்வை ஆகிய நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், இ.ஆ.ப., சென்னை துணை மேயர் மகேஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் கே.ஆயிரத்தரசு இராஜசேகரன், நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களும், அலுவலர்களும் உடனிருந்தனர்.

The post மிக்ஜாம் புயல் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 6வது நாளாக நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Mikjam storm ,Minister ,Chennai ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur ,Mikjam ,Velu ,
× RELATED பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசனை என்பது வதந்தியே: அமைச்சர் சிவசங்கர்