×

தமிழ்நாட்டில் மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு டிச.13ம் தேதி தொடங்கும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில் மழை பாதிப்பு காரணமாக மாநிலம் முழுதுவம் நாளை நடைபெறுவதாக இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு செவ்வாய் கிழமை அன்று வழங்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் புதன்கிழமை முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியானது. டிச.13ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 6 முதல் 10ம் வகுப்பிற்கு திருத்தி அமைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளனர். அதன்படி 13ம் தேதி தமிழ், 14ம் தேதி விருப்பமொழி. 15ம் தேதி ஆங்கிலம், 18ம் தேதி கணிதம், 20ம் தேதி அறிவியல், 21ம் தேதி உடற்கல்வி, 22ம் தேதி சமூக அறிவியலுடன்10ம் வகுப்பிற்கு தேர்வுகள் முடிவடையும். 11ம் மற்றும் 12ம் வகுப்பிறகு டிச.13ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

 

 

 

The post தமிழ்நாட்டில் மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு டிச.13ம் தேதி தொடங்கும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Tamil Nadu ,Education Department ,CHENNAI ,NADU ,STORM MIKJAM ,Thiruvallur ,Kanchipuram ,School Education Department ,
× RELATED மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு...