ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே நடந்து சென்றவர் மீது பைக் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இறவாங்குடி கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (40). சம்பவத்தன்று கல்லாத்தூர் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் இறவாங்குடி கிராமத்திற்கு செல்வதற்காக விருத்தாச்சலம் ரோட்டில் கல்லாத்தூர் ரேஷன் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அன்பழகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விபத்து ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்தவரை ஜெயங்கொண்டம் போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர்.
The post ஜெயங்கொண்டம் அருகே நடந்து சென்றவர் மீது பைக் மோதி உயிரிழப்பு appeared first on Dinakaran.
