×

பாடாலூரில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி திருச்சி வாலிபர் கைது

பாடாலூர்: பாடாலூரில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி ரூ.500 வழிப்பறி செய்த திருச்சியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில், லால்குடி தாலுகா நெடுங்கூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெள்ளைச்சாமி (50) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒருவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 500 ரூபாயை பறித்துச் சென்றார். இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் திருச்சி மாவட்டம் ரங்கம் சக்தி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன்மதன்குமார் (22) என்பதும், அவர் மீது திருச்சி மாவட்டத்தில் 7க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட எஸ்பி. ஷ்யாம்ளா தேவி உத்தரவின் படி அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பாடாலூரில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி திருச்சி வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Padalur ,Dinakaran ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...