பெரம்பலூர்: பெரம்பலூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்டார் விற்பனை, குடில்கள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் மிக முக்கியமான, முதன்மையான திருவிழா கிறிஸ்துமஸ் பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்தத் திருநாளைக் கொண்டாடும் இந்தப் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பை பறைசாற்றும் அடையாளமாக கோயிலில் கிறிஸ்மஸ் குடிலை அமைப்பது போல் வீடுகளிலும், பள்ளிகளிலும், பணிபுரியும் இடங்களிலும் குடில் அமைத்து வணங்கி மகிழ்வார்கள். அதேபோல் இயேசு பிறந்த போது வானில் அரிதாகத் தோன்றிய வால் நட்சத்திரத்தின் அடையாளமாகத் தங்கள் வீடுகளில் ஸ்டார்களை கட்டித் தொங்கவைப்பார்கள். இதற்காக பெரம்பலூர் நகரில் ஸ்டார், குடில்கள், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா உடைகள், குல்லாக்கள், அலங்காரப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
The post மாநாட்டில் வலியுறுத்தல் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்டார், குடில்கள் விற்பனை விறுவிறுப்பு appeared first on Dinakaran.
