×

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த நாடுதான் தமிழ்நாடு: ஒன்றிய அமைச்சர் பெருமிதம்

செம்பனார்கோயில்: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயிலில் உள்ள தனியார் கல்லூரியில் பாஜ சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை மற்றும் ஆயுஷ்த்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு என்பது பாரம்பரியம் பாதுகாப்பு கலாச்சாரமிக்க சோழர்கள் வாழ்ந்த நாடு.

இங்கு திருவள்ளுவர், அப்துல்கலாம், ராமானுஜம், சுந்தர்பிச்சை உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த நாடு தான் தமிழ்நாடு. ஒன்றிய அரசின் ஒன்பதரை ஆண்டு ஆட்சியில் ஏழைகளை பொருளாதார ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இன்று உலக அளவில் இந்தியா ஐந்தாவது பொருளாதார நாடாக வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

The post இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த நாடுதான் தமிழ்நாடு: ஒன்றிய அமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Union Minister Perumitham ,Sembanar ,Koil ,BJP ,Sembanar Koil ,Mayiladuthurai district ,
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக...