×

கார்கில் திட்டத்தை எதிர்த்ததால் நீக்கப்பட்டேன்: நவாஸ் ஷெரீப் வேதனை

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி நடக்க உள்ள பொதுத் தேர்தலில் சீட் கேட்டு விண்ணப்பித்த கட்சியினர் மத்தியில் நேற்று பேசியதாவது: கடந்த 1999ம் ஆண்டு, கார்கில் ஆக்கிரமிப்பு திட்டத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அது நடக்கக் கூடாது என்று கூறினேன். அதனால் நான் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப்பால் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன். ஆனால் அதன் பின் நான் சொன்னது சரி என நிரூபணமானது. நான் 3 முறை பிரதமராக இருந்த போதும், பதவிக்காலத்திலேயே நீக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு முறையும் நான் ஏன் வெளியேற்றப்பட்டேன் என்பதை அறிய விரும்புகிறேன்.இவ்வாறு கூறினார்.

The post கார்கில் திட்டத்தை எதிர்த்ததால் நீக்கப்பட்டேன்: நவாஸ் ஷெரீப் வேதனை appeared first on Dinakaran.

Tags : Nawaz Sharif ,Lahore ,Pakistan ,former ,Kargil ,Dinakaran ,
× RELATED பாக். வரலாற்றில் முதல் முறையாக...