×

சில்லி பாயின்ட்…

* விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் காலிறுதியில் விளையாட பெங்கால், கேரளா அணிகள் தகுதி பெற்றுள்ளன. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நேற்று கேரளா 153 ரன் வித்தியாசத்தில் மகாராஷ்டிராவை வீழ்த்தியது. கேரளா 50 ஓவரில் 383/4 (பிரசாத் 144, ரோகன் 120); மகாராஷ்டிரா 37.4 ஓவரில் 230 ஆல் அவுட் (போசலே 78, கவுஷல் 50). குஜராத் அணியுடன் மோதிய பெங்கால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குஜராத் 50 ஓவரில் 283/9 (பாஞ்சால் 101, சவுரவ் 53, உமாங் 65); பெங்கால் 46 ஓவரில் 286/2 (போரெல் 47, கேப்டன் கராமி 117*, மஜும்தார் 102*).

* மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று நடைபெற்றது. பஞ்சாப் வேகப் பந்துவீச்சாளர் காஷ்வீ கவுதம் (20 வயது) அடிப்படை விலை ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கடும் போட்டிக்கிடையே குஜராத் ஜயன்ட்ஸ் அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது. கர்நாடகா பேட்டர் விரிந்தா திணேஷ் (22 வயது) ரூ.1.3 கோடிக்கு உ.பி.வாரியர்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆல் ரவுண்டர் அனுஷ்கா ஷர்மாவை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.

* கிரிக்கெட் வாரியம் உள்பட விளையாட்டு நிர்வாக அமைப்புகளுக்கு, இடைக்கால நிர்வாகக் குழுக்களை அமைப்பதற்கான விளையாட்டுத் துறை அமைச்சரின் அதிகாரம் விலக்கிக் கொள்ளப்படும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

* ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பெங்களூரு எப்சி அணி வெற்றிகளைக் குவிக்க முடியாமல் தடுமாறி வருவதை அடுத்து, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் கிரேசன், துணை பயிற்சியாளர் நீல் மெக்டொனால்டு இருவரும் அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Bengal ,Kerala ,Vijay Hazare Trophy ODI ,Dinakaran ,
× RELATED ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கு...