×

பைக் மோதி மூதாட்டி பலி

சேலம், டிச.9: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கலாராணி (65). இவர் மாற்றுதிறனாளிகள் பாட்டு பாடும் குழுவில் உண்டியலில் காசு வசூல் செய்து வந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவர் கருப்பூர் வருவாய் அலுவலர் அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கலாராணி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

The post பைக் மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Kalarani ,Panamarathupatti Arunthathiyar Street, Salem district ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்