×

குன்னூரில் வளர்ப்பு நாயை பிடிக்க குடியிருப்புக்குள் வந்த சிறுத்தையால் அச்சம்

 

ஊட்டி, டிச.9: குன்னூரில் வளர்ப்பு நாயை பிடிக்க குடியிருப்பு பகுதிக்குள் வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிறுத்தை, கரடி, காட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதால், அடிக்கடி மனித விலங்கு மோதல் ஏற்படுகிறது. மேலும், வளர்ப்பு பிராணிகளையும் வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் தற்போது சிறுத்தைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.

இவைகள் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்வது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், குன்னூர் குடியிருப்பு பகுதியில் வீட்டில் வளர்கப்படும் நாயை பிடிக்க ஒரு சிறுத்தை வலம் வருவது சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள், தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினரும் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வந்து சென்ற சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post குன்னூரில் வளர்ப்பு நாயை பிடிக்க குடியிருப்புக்குள் வந்த சிறுத்தையால் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Nilgiris district ,
× RELATED விரைவு கட்டணம் வசூலிக்கும் பஸ்களின்...