×

போலி எஸ்ஐ கடத்தி கொலை: டிராவல்ஸ் அதிபர் உள்பட 3 பேர் கைது

உடுமலை: குடிமங்கலம் அருகே எஸ்ஐயாக நடித்து ஏமாற்றியவரை கடத்தி கொன்ற கோவை டிராவல்ஸ் அதிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சரவணபாண்டியன், கோவை தெலுங்கு பாளையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் சரவணவேலன் என்பவர் தன்னை சப்-இன்ஸ்பெக்டர் என கூறி அறிமுகமாகி உள்ளார். பின்னர், சரவணபாண்டியனிடம் வாடகைக்கு கார் எடுத்த சரவணவேலன் செல்லாத ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை மற்ற கேரளா சென்றபோது அம்மாநில போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், காரையும் பறிமுதல் செய்தனர்.

அப்போதுதான் சரவணவேலன் சப்-இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி காரை வாடகைக்கு எடுத்து சென்றது சரவணபாண்டியனுக்கு தெரியவந்தது. இதையடுத்து சரவணபாண்டியன் ரூ.3 லட்சம் செலுத்தி கேரளாவில் இருந்து காரை மீட்டு வந்துள்ளார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த சரவணவேலனிடம் ரூ.3 லட்சம் பணத்தை தருமாறு தொடர்ந்து அவர் கேட்டு வந்துள்ளார். ஆனால் சரவணவேலன் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் சரவணபாண்டியன் ஆத்திரத்தில் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் சரவணவேலன் இருப்பது சரவணபாண்டியனுக்கு தெரியவந்தது. இதையடுத்து தன்னிடம் டிரைவர்களாக பணியாற்றும் முத்து செல்வம், ரித்திக் ஆகியோரை அழைத்துக்கொண்டு குடிமங்கலத்துக்கு அவர் காரில் சென்றார். சின்னச்சாமி முன்னிலையில் சரவணவேலனை கோவைக்கு காரில் அவர்கள் கடத்தி சென்றனர். அப்போது சரவணவேலன் சத்தம் போடவே அவர்கள் வாயை பொத்தியுள்ளனர். இதில் சரவணவேலன் மூச்சு திணறி இறந்துள்ளார். இதுகுறித்து சின்னசாமி அளித்த புகாரின்பேரில் குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து சரவணபாண்டியன், முத்து செல்வம், ரித்திக் ஆகியோரை கைது செய்தனர்.

The post போலி எஸ்ஐ கடத்தி கொலை: டிராவல்ஸ் அதிபர் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : SI ,Udumalai ,Coimbatore ,Kudimangalam ,
× RELATED காவல் அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி