×

புயலால் ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வுகள் 11ம் தேதி தொடங்குகிறது

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளதாக சென்னைப் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிப் பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளின் நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் நடந்து வந்தன. கடந்த 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான மாற்று தேதியை சென்னைப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் வரும் 11ம் தேதி முதல் 12ம் தேதிவரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு www.unom.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புயலால் ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வுகள் 11ம் தேதி தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Madras University ,Chennai ,University of Chennai ,Mikjam ,Chennai University ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...