×

மடத்துக்குளம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை

 

உடுமலை, டிச. 9: மடத்துக்குளம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் தாந்தோணி ஊராட்சியில் சாலை அமைத்தல், சேரன் நகர் பகுதியில் பிளாக் ரோடு அமைத்தல், துங்காவி ஊராட்சி பாறையூர் கிராமத்தில் கான்கிரீட் தளம் அமைத்தல் ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் மற்றும் மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்து, பணிகளை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலாளர் ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் ஒன்றிய குழு தலைவர் காவ்யா, ஊராட்சி தலைவர் சுகந்தி செல்லப்பன், துணைத்தலைவர் சுப்ரமணி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் மெய்ஞானமூர்த்தி, உடுமலை ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, பாலசெந்தில், நாகலட்சுமி, தீபிகா முருகானந்தம், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மடத்துக்குளம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhumi ,Pooja ,Madathukulam Union ,Udumalai ,Dandoni Panchayat ,Madathikulam Union ,Cheran Nagar ,Bhumi Pooja ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைக்கு பூமி பூஜை