×

மிக்ஜாம் புயல் பாதிப்பு: மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா..!!

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெறும் மழை, வெள்ளம் மீட்பு பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழையை பொழிய செய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அதனை வெளியேற்றும் வேலைகளிலும், அங்குள்ள மக்களை மீட்கும் வேலைகளிலும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புயல், மழையால் பாதிக்கப்பட்ட வடசென்னையில் முக்கியமான பகுதியாக இருக்கக்கூடிய புளியந்தோப்பு பகுதியில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். புளியந்தோப்பு, ஓட்டேரி, பட்டாளம் பகுதிகளில் தலைமை செயலாளர் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அண்ணாநகர் பகுதி தற்போது எந்த நிலையில் உள்ளது? மழைநீர் வடிந்துள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மீட்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்து தலைமை செயலாளரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர் ராதகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு: மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா..!! appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Shivdas Meena ,Chennai ,Pulianthoppu ,Dinakaran ,
× RELATED மக்கள் நல திட்டங்கள் எவ்வாறு...