×

வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை விபத்தில் மீட்புப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது: ராதாகிருஷ்ணன்

சென்னை: வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை விபத்தில் மீட்புப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பள்ளத்தில் சிக்கிய 5 பேரில் ஏற்கனவே 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் நரேஷ் என்பவர் உடல் இன்று காலை மீட்கப்பட்டது. 50 அடி ஆழ பள்ளத்தில் சிக்கியுள்ள ஜெயசீலன் என்பவர் உடல் எங்கு உள்ளது என்று தெரியவந்துள்ளது. தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மூலம் மீட்புப் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

The post வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை விபத்தில் மீட்புப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது: ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Velachery five-furlong road accident ,Radhakrishnan ,Chennai ,Chennai Corporation ,Commissioner ,Velachery Five Furlong Road accident ,Velachery ,-furlong ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...