×

சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பு கரூரிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி

கரூர், டிச. 8: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தங்கவேல், மாவட்ட நிர்வாகம் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தை, எம்எல்ஏ சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலையில் அனுப்பி வைத்தார்.

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் வகையில் 5000 போர்வைகள், 5000 வாட்டர் பாட்டில்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ உபகரணங்கள், நாப்கின் போன்ற பல்வேறு பொருட்களை மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைக்கப்படவுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், துணை மேயர் சரவணன், தாசில்தார்கள் வெங்கடேசன், ராதிகா மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

The post சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பு கரூரிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Karur ,District Collector ,Thangavel ,Migjam ,
× RELATED கிரஷர் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்