×

கொடி நாள் நிதி வசூல் பணி துவங்கியது கரூர் கட்டளைப் பகுதியில் அதிகளவில் சம்பா சாகுபடி பணி தீவிரம்

கரூர்: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் நெல், கோரை, வெங்காயம், சோளம், மரவள்ளிக் கிழங்கு போன்றவை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் காவிரி என 2 ஆறுகள் செல்கின்றன. இதில், காவிரி ஆற்றுப்பகுதியில்தான் அதிகளவு சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கரூர் மாநகரின் வழியாக செல்லும் அமராவதி ஆறு, திருமுக்கூடலூர் வழியாக செல்லும் காவிரியுடன் இணைந்து ஒரு மித்த காவிரியாக, கட்டளை மற்றும் மாயனூர் நோக்கிச் செல்கிறது. இந்த பகுதிகளில்தான் அதிகளவு விவசாயிகளால் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம், ஏரி குளம் மற்றும் கிணற்றுப்பாசனம், வானம் பார்த்த பூமி பாசனம் என்ற அடிப்படையில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

அந்த வகையில், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கட்டளை, குளித்தலை, மாயனூர், திருமுக்கூடலூர் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தற்போது சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. தை மாதத்தில் அனைத்து பயிர்களும் அறுவடை செய்யும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post கொடி நாள் நிதி வசூல் பணி துவங்கியது கரூர் கட்டளைப் பகுதியில் அதிகளவில் சம்பா சாகுபடி பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu ,
× RELATED வாங்கல் அருகே உயர் ரத்த அழுத்த பாதிப்பால் மயங்கி விழுந்த பெண் பரிதாப பலி