×

மகன் திருடனானதால் நகைக்கடை கொள்ளையனின் தந்தை தற்கொலை

தர்மபுரி: மகன் திருடனானதால் நகைக்கடை கொள்ளையனின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை காந்திபுரத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த 28ம் தேதி 4 கிலோ 600 கிராம் நகைகள் கொள்ளை போனது. கடையில் இருந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்ததில் ஆனைமலை சேர்ந்த விஜய் என்பவர் ஈடுபட்டிருந்தது தெரிந்தது. அவரை பிடிக்க போலீசார் சென்றபோது வீட்டை ஓட்டை பிரித்து விஜய் தப்பினார். இதையடுத்து அங்கிருந்த அவரது மனைவி நர்மதாவை கைது செய்த போலீசார், வீட்டில் இருந்த 3.2 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, அரூர் பகுதியில் உள்ள விஜயின் மாமியார் யோகராணி வீட்டின் அருகே குப்பை தொட்டி, சாக்கடை கால்வாய் மற்றும் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 125 பவுன் நகைகளை மீட்டு அவரையும் கைது செய்தனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் உள்ள விஜயின் தந்தை முனிரத்தினம் தாய் மாரம்மாள் ஆகியோரிடம் நேற்று முன்தினம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த விஜய்யின் 2 செல்போன்கள், 38 கிராம் நகைகளை போலீசார் மீட்டனர். இந்நிலையில், மகன் கொள்ளைக்காரனாக மாறியதால் மனவேதனையில் இருந்து வந்த முனிரத்தினம் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post மகன் திருடனானதால் நகைக்கடை கொள்ளையனின் தந்தை தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Jose ,Alukas ,Gandhipuram, Coimbatore ,
× RELATED தருமபுரி மாவட்டம் சவுளுகொட்டாய்...