×

மீஞ்சூர் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி: எம்எல்ஏ ஆய்வு

 

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆய்வு செய்து உதவி வழங்கினார். பொன்னேரி தொகுதியில், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்பாலைவனம், வஞ்சிவாக்கம், பழவேற்காடு, போளாச்சி அம்மன் குளம், ஆண்டார் மடம் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த பகுதிகளை காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்களுக்கு மருத்துவம், உணவு உள்ளிட்ட உதவியை வருவாய் துறை, உள்ளாட்சித் துறை மூலம் ஏற்பாடு செய்தார்.

இதேபோல் அத்திப்பட்டு ஊராட்சி புதுநகர் பள்ளம் பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அங்கு நேற்றுமுன்தினம் மாலை துரை சந்திரசேகர் எம்எல்ஏ, தேசிய அனல் மின் நிலைய துறை அதிகாரிகளுடன் சேர்ந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், எம்எல்ஏ உடன் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், மீஞ்சூர் திமுக ஒன்றியச் செயலாளர் வல்லூர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ், திமுக பொறுப்பாளர் அன்புவாணன், அத்திப்பட்டு காங்கிரஸ் வட்டார தலைவர் புருஷோத்தமன் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post மீஞ்சூர் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி: எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Union ,Ponneri ,MLA ,Durai Chandrasekhar ,Meenjoor Union ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி...