×

பொன்னேரி தாலுகாவில் மழை பாதிப்பு கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்

 

பொன்னேரி: பொன்னேரி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மிக்ஜாம் புயல் மழை பாதிப்பு காரணமாக, பொன்னேரி தாலுகாவுக்கு உட்பட்ட பழவேற்காடு, பொன்னேரி, காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் கடந்த 4 நாட்களாக மின்சாரம் இல்லாமல், குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின் பேரில், பொன்னேரி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடியாக கிராம பகுதிகளுக்கு நேற்றுமுன்தினம் சென்றனர். பின்னர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தி, தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொன்னேரி தாசில்தார் மதிவாணன் மேற்பார்வையில் வருவாய் துறை ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்றனர். பின்னர், அவர்களுக்கு உணவு, மருந்து, மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

The post பொன்னேரி தாலுகாவில் மழை பாதிப்பு கணக்கெடுப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ponneri taluk ,Ponneri ,Dinakaran ,
× RELATED இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட...