×

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் காலிறுதியில் மாளவிகா-லக்சனா

கவுகாத்தி கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி அசாம் மாநிலத்தில் நடக்கிறது. அங்கு நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடந்தன.மகளிர் ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மாளவிகா மன்சூட், தன்யா ஹேமநாத் ஆகியோர் மோதினர். அதில் மாளவிகா 39 நிமிடங்களில் 21-13, 21-17 நேர் செட்களில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். அதே நேரத்தில் வெளிநாட்டு வீராங்கனைகளுடன் மோதிய மற்ற இந்திய வீராங்கனைகளான உன்னதி ஹூடா, அனுபாமா உபாத்தியயா, ஆகர்ஷி காஷ்யப், சமியா இமாத் ஆகியோர் தோல்வியை சந்தித்தனர்.

காலிறுதிக்கு கட்டாயம் முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஈரா சர்மாவும் ஏமாற்றம் அளித்தார். அவர் மலேசியாவின் தமிழ் வீராங்கனை லக்சனா கருப்பதேவனுடன் மோதினார். ஒரு மணி நேரம் நீண்ட ஆட்டத்தில் லக்‌சனா 21-15, 11-21, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் களம் கண்ட 7 இந்திய வீரரர்களில் 6பேர் வெளிநாட்டு வீரர்களிடம் தோல்வியை தழுவினர். அதே நேரத்தில் இந்தியாவின் குல்ஷன் குமார் மட்டும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-18, 21-15 என்ற நேர் செட்களில் டென்மார்க் வீரர் மேட்ஸ் கிறிஸ்டோபர்சன்னை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 36நிமிடங்களில் முடிந்தது. இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் மகளிர் பிரிவில் மாளவிகா-லக்சனா, ஆடவர் பிரிவில் குல்ஷன் குமார்- செம் ஜூன் வெய்(மலேசியா) ஆகியோர் மோத உள்ளனர்.

The post கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் காலிறுதியில் மாளவிகா-லக்சனா appeared first on Dinakaran.

Tags : Malavika-Laksana ,Guwahati Masters Badminton quarterfinals ,Guwahati Guwahati Masters Badminton Tournament ,Assam ,Dinakaran ,
× RELATED சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின்...